Friday, 6 February 2015

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது? 1. 52 ஆண்டுகள்
2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்? 2. செம்ஸ்போர்டு பிரபு
3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது? 3. கிருஷ்ணா நதி
4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக. 4. 1. ராஜஸ்தான் ,2. மத்திய பிரதேசம்,3. மகாராஷ்டிரா
5 உலக புற்றுநோய் தினம் எது? 5. பிப்ரவரி 4
6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்? 6. 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.
7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்? 7. 1975 - வெஸ்ட் இண்டீஸ்
8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது? 8. அமெரிக்கா
9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது? 9. ஜப்பான்
10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 10. 60
11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது? 11. குஜராத் (அகமதாபாத்).
12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை? 12. 962
13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்? 13. 1912
14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது? 14. லடாக் விமானத்தளம்.
15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது? 15. விவசாயத் துறையில்
16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது? 16. முதலாவது திட்டம்
17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன? 17. பிரித்வி
18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது? 18. 5 ஆண்டுகள்
19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது? 19. 1945
20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? 20. 1944
21. புதுடில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் ரஷ்ய வங்கியின் பெயர்? 21. Income
22. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது? 22. Rate of Indirect Tax
23. பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது? 23. 2002
24. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது? 24. 4-வது இடம்
25. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது? 25. சாளுக்கியர்கள்
26. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது? 26. ஜோகன்ஸ்பர்க்
27. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது? 27. அமெரிக்கா
28. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது? 28. அயர்லாந்து
29. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்? 29. டாக்டர். ஜன் மத்தால்
30. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 30. 2002
31. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? 31. 1951
32. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது? 32. வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்
33. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன? 33. பிளிம்சால் கோடுகள்
34. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது? 34. 2003
35. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது? 35. சிக்கிம் (0.05%)
36. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது? 36. ஏழாவது இடம்
37. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 37. 640
38. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு? 38. 74.04% (2001-ல் 64.38%)
39. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன? 39. 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்
40. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்? 40. வாரன் ஹேஸ்டிங்ஸ்

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
41. பன்மை செயலாட்சிமுறை நிர்வாகம் கொண்ட உலகின் ஒரே நாடு எது? 41. சுவிட்சர்லாந்து
42. இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்ட நாள்? 42. 8.10.1932
43. "ஸ்லம் டாக் மில்லியனர்" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது? 43. 8 தலைப்புகள்
44. கருணை கொலையை சட்டப்படி அனுமதித்துள்ள முதல் நாடு எது? நெதர்லாந்து
45. மகாபலிபுரம் நகரத்தை தோற்றுவித்தவர் யார்? நரசிம்மவர்மன்
46. 2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது? இத்தாலி
47. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன? 65
48. புக்கர் விருது வழங்கப்படும் துறை எது? பத்திரிக்கை
49. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்பது எந்த துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது? பாதுகாப்புத்துறை
50. இந்திய ஊழியர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்? கோபால கிருஷ்ண கோகலே
51. உலோகங்களில் லேசானது எது? லித்தியம்
52. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? அரிஸ்டாட்டில்
53. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஊக்கம் உடைமை ஆக்கத்துக்கு அழகு இந்த சொற்றொடர்கள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?
கொன்றைவேந்தன்
54. 1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது..
2. நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா...
3. காய்ச்சிய பால், சுட்ட சங்கு... மேன்மேக்கள்
4. தீயாரைக் காண்பதூவும் தீதே திரு அற்றே தீயார்சொல் கேட்பதூவும் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதூஉம் தீதே - அவரோடு இணங்கி இருப்பதூஉம் தீது
5. நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.... இந்த செய்யுள்கள் இடம்பெற்ற நூல் எது?
மூதுரை
55. கவிச் சக்கரவர்த்தி கம்பரின் சமாதி எங்கு உள்ளது? சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை
56. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேச சட்ட சபைகளுக்கு பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய சட்டதிருத்த எண் எது? 47
57. வாக்குரிமைக்கான வயது 21-லிருந்து 18 வயதாக குறைக்கப்பட்ட சட்டத்திருத்த எண் எது? 61
58. Mini Constitution என அழைக்கப்படும் இந்திய அரசியல் சட்டத்திருத்தம் எது? 42-வது சட்டத்திருத்தம்
59. National Development Council இந்தியாவில் எப்போது அமைக்கப்பட்டது? அதன் தலைவர் யார்? 6.8.1952, பிரதமர்
60. உயிருடன் இருக்கும்போதே தபால் தலைகளில் இடம்பெற்றவர்கள் யார்? அன்னை தெரசா, ராஜீவ்காந்தி, சச்சின் டெண்டுல்கர்
61. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1945
62. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மூலம் நிறுவப்பட்டது? பிரிவு 315 (Article 315)
63. உடன்குடி அனல்மின் திட்டம் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது? பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (BHEL)
64. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது? பிரிவு எண் 136
65. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்? கர்ணம் மல்லேஸ்வரி
66. இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் யார்? சரோஜினி நாயுடு
67. முதல் பெண் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) யார்? சிவபாக்கியம்
68. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை? 1 கோடியே 20லட்சம்
69. திபெத் நாடு தற்போது எந்த நாட்டுடன் இணைந்துள்ளது? சீனா
70. பிரெய்லி முறையில் ஓட்டுப்பதியும் புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
71.
தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன?1,492
72. உலக வங்கி எங்கு அமைந்துள்ளது?வாஷிங்டன்
73. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?ரா.பி.சேதுப்பிள்ளை
74. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?1955
75, தமிழ்நாட்டில் சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணத்தை செல்லுபடியாக்கும் சட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?1967
76. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே தமிழக பள்ளிகளில் கற்பிக்க வகை செய்யும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?1968
77. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்போது சட்டம் இயற்றப்பட்டது?
1996
78. இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன?12,500
79. முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது? யார் எப்போது கட்டினார்?
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி. ஆங்கில பொறியாளர் பென்னிகுக், 1895-ல்
80. முல்லை பெரியாறு அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறும் மாவட்டங்கள் எவை?
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
81. முல்லை பெரியாறு அணைத்திட்ட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த குழு எது?
ஓய்வுபெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக்குழு
82. தமிழகத்தில் உள்ள அணைகளில் மிகப்பெரியது எது?மேட்டூர் அணை
83. உலகில் சைக்கிள்கள் அதிகமாக உள்ள நகரம் எது?பீஜிங் (சீனா)
84. உலகின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது?கனடா - வான்கோவர் நகரம்
85. செவிப்பறையை பரிசோதிக்கப் பயன்படும் கருவியின் பெயர் என்ன?ஓடோஸ்கோப் (Odoscope)
86. இந்திய பிளைவுட் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?பெங்களூரு
87. போலீஸாருக்குப் பயிற்சி அளிக்க மட்டுமென புதிய பல்கலைக்கழகம் அமைக்க எந்த மாநில அரசு முடிவுசெய்துள்ளது?மகாராஷ்டிரா
88. முண்டா என்ற பழங்குடியினர் காணப்படும் மாநிலம் எது?பீகார்
89. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?18 சதவீதம்
90. உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு எவ்வளவு?2 சதவீதம்
91. "சுயராஜ்ஜியமே எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்" என முழக்கமிட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் யார்?பாலகங்காதர திலகர்
92. இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு?7,516 கி.மீ
93. ஐரோப்பிய நாடுகளில் ஏழை நாடு என அழைக்கப்படும் நாடு எது?அல்பேனியா
94. இந்தியாவில் மிக அதிக நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடு எது?வங்காளதேசம்
95. இந்தியாவில் உள்ள மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் (MLA) எண்ணிக்கை எத்தனை?4,120
96. தமிழக அரசின் மாநில மரம் எது?பனை மரம்
97. யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?47 வருடங்கள்
98. புலியின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?19 வருடங்கள்
99. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?AB
100. இந்தியாவின் மொத்த பரப்பளவு என்ன?32,80,483 ச.கி.மீ.
101. நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?75,166 கி.மீ
102. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன?15,200 கி.மீ
103. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?பிரம்மபுத்திரா
104. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது?ஜெர்மனி
105. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் யார், 2-வது தமிழர் யார்?அகிலன் - ஜெயகாந்தன்
106. இந்தியாவில் மிக அதிக கடற்கரை நீளம் கொண்ட முதல் இரண்டு மாநிலங்கள் எவை?குஜராத், ஆந்திரம்
107. உலகின் மிகப்பெரிய நாடு எது?ரஷ்யா
108. இந்தியாவின் மிக உயர்ந்த ராணுவ விருது எது?பரம்வீர் சக்ரா
109. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்தவர் யார்?ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
110. யூத மதத்தின் புனித நூல் எது?தோரா (Torah)
111. "சுங்கம் தவிர்த்த சோழன்", "திருநீற்றுச்சோழன்" என அழைக்கப்பட்ட மன்னன் யார்?முதலாம் குலோத்துங்கன்
112. "வாதாபி கொண்டான்", "மாமல்லன்" என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?முதலாம் நரசிம்ம பல்லவன்
113. குடவரை கோயில்கள், குடுமியான் மலைக்கல்வெட்டு எந்த பல்லவ மன்னர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது?முதலாம் மகேந்திர வர்மன்
114. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதலில் வென்ற நாடு எது?உருகுவே - 1930
115. Femicide என்றால் என்ன?பெண்ணை கொல்வது
116. Genocide என்பது என்ன?இனப்படுகொலை
117. இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கு (IAS, IPS) பயிற்சி வழங்கும் நிறுவனம் எது? எங்குள்ளது?
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகக் கல்வி நிறுவனம் - மிசோரி (உத்தரஞ்சல் மாநிலம்)
118. ஆங்கில ஆட்சியின்போது வ.உ.சி.யால் வாங்கப்பட்ட கப்பல்களின் பெயர் என்ன?
எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ்.லாவோ
119. சென்னையில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?1711-12-ல் டேனியர்களால்
120. மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்த சட்டம் எது?1935-ம் ஆண்டு சட்டம்
121. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?20.12.1996-ல்
122. இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை எது?பல கட்சி முறை
123. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் உள்ள கட்சி முறை?இரு கட்சிமுறை
124. Public Service Guarantee Act-2010-ஐ இந்தியாவில் இயற்றிய முதல் மாநிலம் எது?மத்தியப் பிரதேசம்
125. "World of All Human Rights" என்ற நூலை எழுதியவர் யார்?சோலி சொராப்ஜி
126. இந்திய விடுதலைப் போராட்டத்தில் "சீக்கிய சிங்கம்" என அழைக்கப்பட்டவர் யார்?மகாராஜா ரஞ்சித் சிங்
127. நில இணைப்புக் கொள்கை (Policy of Annexation), அவகாசியிலிக் கொள்கை (Doctrine of Lapse) அறிமுகப்படுத்தியவர் யார்? டல்ஹவுசி பிரபு
128. "புதிய இந்தியாவின் விடிவெள்ளி", "முற்போக்கு ஆன்மீக கண்டம் கண்ட இந்திய கொலம்பஸ்" என அழைக்கப்பட்டவர் யார்? ராஜாராம் மோகன்ராய்
129. பிரம்ம ஞான சபை (The Theosophical Society) முதன்முதலில் தொடங்கப்பட்ட நாடு எது?
நியூயார்க் (அமெரிக்கா). 1879-ல் தலைமையிடம் சென்னைக்கு மாற்றப்பட்டது
130. பகவத் கீதையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?அன்னி பெசன்ட் அம்மையார்
131. இல்பர்ட் மசோதா (Ilbert Bill) கொண்டுவந்தவர் யார்?
ரிப்பன் பிரபு. இந்த மசோதா மூலம் இந்திய மாஜிஸ்திரேட்டுகளும், நீதிபதிகளும் ஐரோப்பியர்களை விசாரித்து தண்டிக்கும் உரிமை பெற்றனர்.
132. காங்கிரசின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
133. இந்தியாவின் குரல் (Voice of India) என்ற பத்திரிகையை தொடங்கியவர் யார்?தாதாபாய் நௌரோஜி
134. "Grand old man of India" என போற்றப்பட்டவர் யார்?தாதாபாய் நௌரோஜி
135. I.C.S. (Indian Civil Service) பதவிக்கு 20 வயதில் தகுதிபெற்ற முதல் இந்தியர் யார்?சுரேந்திரநாத் பானர்ஜி
136. "நியூ இந்தியா", "வந்தே மாதரம்" ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?பிபின் சந்திரபால்
137. கேசரி என்ற மாதாந்திர ஏட்டையும், மராத்தா (The Maratta) என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டவர் யார்?பால கங்காதர திலகர்
138. "கீதா ரகசியம்" என்ற நூலை எழுதியவர் யார்?பால கங்காதர திலகர்
139. செஞ்சிலுவை சங்கத்தை நிறுவியர் யார்?ஹென்றி டுனான்ட் (Henri Dunant)
140. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?மேரி கியூரி (இயற்பியல் - 1903)
141. தேர்தல்களில் வேட்பாளர்களை நிராகரிக்கும் முறை (எதிர்மறை வாக்கு எண்) உலகில் எத்தனை நாடுகளில் உள்ளது?31 நாடுகளில்
142. அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த கட்சியைச் சேர்ந்தவர்?ஜனநாயகக் கட்சி
143. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?ராஜாஜி
144. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தை கூட்டுவதற்கான அதிகாரம் எந்த அரசியல் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?பிரிவு 106
145. பாராளுமன்றக் கூட்டுக்கூட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்கள் எவை?
1. வரதட்சணை தடுப்பு சட்டம்-1961 , 2. வங்கிப்பணி கமிஷன் விலக்கு சட்டம் - 1978 , 3. தீவிரவாத தடுப்புச் சட்டம் - 2002
146. இந்தியாவில் அதிக வேகமாக ஓடும் ரயில் எது?
புது டெல்லி - ஹவுரா இடையே ஓடும் ராஜதானி விரைவில் ரயில், மணிக்கு 161 கி.மீ. வேகம்
147. சர்தேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?ஜெனீவா
148. இந்தியாவில் முதல் மோனோ ரயில் எங்கு இயக்கப்பட்டது?மும்பை
149. இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எணணிக்கை எத்தனை?906

150. இந்தியாவில் உள்ள புலிகள் எண்ணிக்கை எத்தனை?1,706

Sunday, 1 February 2015

இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்

இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்· 

ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி - வேலுநாச்சியார் .
· வேலுநாச்சியாரின் பெற்றோர் – செல்லமுத்து சேதுபதி , சக்கந்தி
· கணவர் – சிவகங்கை முத்துவடுகநாதர்
· 1780-ல் ஐதர் அலியுடன் இணைந்து சிவகங்கையை மீட்டார் .
· அஞ்சலையம்மாள் , கடலூர் முதுநகரில் 1890 – ல் பிறந்தார் .
· ‘குடும்ப சொத்தையும் குடியிருந்த வீட்டையும் போராட்டத்திற்காக விற்றவர் ’ – அஞ்சலையம்மாள் .
· அஞ்சலையம்மாளின் மகள் – அம்மாக்கண்ணு ,
· அம்மாக்கண்ணிற்கு காந்தியடிகள் இட்ட பெயர் – லீலாவதி .
· வை.மு.கோதைநாயகி , ருக்மணி , லட்சுமிபதி முதலிய நண்பிகளோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராய் குரல் கொடுத்தவர் – அம்புஜத்தம்மாள் .
· ‘சிறையிலிருந்போது மனம்தளராது , தான் கற்ற மொழிகளை பிறருக்கு கற்றுக்கொடுத்தவர் ’ – அம்புஜத்தம்மாள் .
· ‘காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்’ – அம்புஜத்தம்மாள் .
· ‘தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனம் ’ – சீனிவாச காந்தி நிலையம் .
· ‘நான் கண்டபாரதம் ’ எனும் நூலை எழுதியவர் – அம்புஜத்தம்மாள்
· ‘பெற்றதாயும் பொன்னாடும்
நன்னிலவானினும் நனிசிறந்தனவே’ – பாரதியார் .

இந்தியக் காடுகளும் சட்டங்களும் (FOREST ACTs IN INDIA)

இந்தியக் காடுகளும் சட்டங்களும் (FOREST ACTs IN INDIA)

ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே துறையின் கட்டமைப்பிற்காக காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.காடுகளின் பயன்பாட்டினைப் பெறுவதற்கு ஏற்றவாறு சட்டங்கள் முதன்முதலில் உருவாக்கப்பட்டன.

1864-வனத்துறை உருவாக்கப்பட்டது 

1865-வனச்சட்டம் ( FOREST ACT,1865) இயற்றப்பட்டது

இச்சட்டம் மரங்கள் சூழ்ந்த எந்த ஒரு நிலத்தையும் காடாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கியது.அவ்வாறு அறிவிக்கப்பட்ட காடுகளை மேலாண்மை செய்யும்போது அங்கு வாழும் தனி நபர் அல்லது சமூகங்களின் உரிமைகள் பாதிக்கப்படகூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

1878-வனச்சட்டம் 1878

இச்சட்டம் 1865 இல் இயற்றப்பட்டசட்டத்தை விட விரிவானது.இச்சட்டம் காடுகளைக் காப்புக் காடுகள் (RESERVED FORESTS),பாதுகாக்கப்பட்ட காடுகள் (PROTECTED FORESTS),கிராமக் காடுகள் (VILLAGE FORESTS) என்று மூன்றாக வகைப்படுத்தியது.

1894-வனக் கொள்கை (FOREST POLICY) உருவாக்கப்பட்டது

இக்கொள்கை காடுகளை நான்காக வகைப்படுத்தியது

1) தட்ப வெட்ப நிலைக்காகப் பாதுகாக்கப்படும் காடுகள்.

2) வணிகப் பயன்பாட்டிற்காக வெட்டு மரம் (TIMBER) தரும் காடுகள்.

3) சிறு காடுகள் (MINOR FORESTS)

4) மேய்ச்சல் நிலங்கள் (PASTURE LANDS) 

1927-வனச்சட்டம் 1927 காடுகளின் மீதான சமுகத்தின் உரிமைகளை நீக்கியது. 


விடுதலைக்குப்பின் 

1952-வனக் கொள்கை 1952

1894 வனக் கொள்கையில் குறிப்பிடாத பழங்குடியினர் நிலங்களும் இதன் கீழ் கொண்டுவரப்பட்டது.மேய்ச்சலுக்கு வரி போடப்பட்டது

1960-குடியரசுத்தலைவரால் திபார் குழு (DHEBAR COMMISSION) அமைக்கப்பட்டது

அக்குழு பழங்குடியினர் வாழ்க்கையில் காடுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியது.வனக் கொள்கை 1952 மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும்,பழங்குடியினர் காடுகளில் வேளாண்மை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

1966-இந்திய வனப்பணி (INDIAN FOREST SERVICE) ஏற்படுத்தப்பட்டது

1976-42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் காடுகள் என்ற பிரிவு மாநிலப்பட்டியலிருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.இதன் மூலம் காடுகள் மீதான நடுவண் அரசின் அதிகாரம் கூடியது.

1980-வனச்சட்ட முன்வடிவு (FOREST DRAFT BILL) கொண்டுவரப்பட்டது

காடுகளின் மீதான மக்களின் உரிமையைக் குறைப்பதாக இச்சட்டம் முன்வடிவு இருந்தது.மேலும் இச்சட்ட முன்வடிவின்படி நடுவண் அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு காட்டையும் காப்பு காடாக அறிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது.இது மாநில அரசுகளின் எதிர்ப்புக்கு உள்ளானதால் திரும்பப் பெறப்பட்டது.

1982-வனக்கொள்கையின் மறுசீரமைப்பிற்காக ராய் பர்மன் (Dr.B.K.ROY BURMAN) குழு அமைக்கப்பட்டது

இக்குழு காடுகளின் உருவாக்கத்திற்கும்,பாதுகாப்பிற்கும்,மேலான்மைக்கும் சமுகத்தின் பங்களிப்பே தொலைநோக்கு தீர்வு எனக் கருதியது

1985-வனத்துறை வேளாண் அமைச்சகத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட சுற்று சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது 

1988- சுற்று சூழல் அமைச்சகம் உருவாக்கிய தேசிய வனக்கொள்கைத்தீர்மானத்திற்கு (NATIONAL FOREST POLICY RESOLUTION) நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளித்தது.அத்தீர்மானத்தின் அடிப்படையில் வனச்சட்டம் 1988 உருவாக்கப்பட்டது.