Monday 9 February 2015

மாதிரி வினாத்தாள்-4

மாதிரி வினாத்தாள்-4


1.பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
அ)முகவுரையை ARTICLE 368ன் படி திருத்தலாம்
ஆ)முகவுரை இதுவரை ஒருமுறை மட்டுமே  திருத்தப்பட்டுள்ளது.
இ)1976-42வது சட்டத்திருத்ததின்படி முகவுரையில் சமதர்மம்,சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு ஆகிய மூன்று வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது
ஈ)அனைத்தும் சரி

2.ஐக்கிய மாகாணத்தின் பெயர் உத்திரபிரதேசம் என மாற்றப்பட்ட ஆண்டு?
அ)1950                               ஆ)ஆ959
இ)1956                               ஈ)1952

3.1953 ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதலாவது பிற்படுத்ப்பட்டோர் ஆனையத்தின் தலைவர் யார்?
அ)காகா கலேல்கர்                    ஆ)B.P.மண்டல்
இ)பாசல் அலி                         ஈ)S.K.தார்

4.ஏப்ரல்-2004 ல் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட முகமைஎன அறிவிக்கப்பட்ட அமைப்பு?
அ)மத்திய அரசு பணியாளர் தேர்வானையம்
ஆ)மத்திய புலனாய்வு அமைப்பு
இ)தேசிய மனித உரிமை ஆனையம்
ஈ)மத்திய ஊழல் கண்கானிப்பு ஆனையம்

5.மண்டலக்குழுவின் துணைத்தலைவர் யார்?
அ)பிரதமர்                            ஆ)மத்திய உள்துறை அமைச்சர்
இ)முதலமைச்சர்                      ஈ)இவற்றில் யாருமில்லை

6.இந்தியாவில் 1985-ல்  கட்சித்தாவல் தடைச்சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே 1979-ல் கட்சி தாவல் தடைச்சட்டத்தை கொண்டு வந்த மாநிலம்?
அ)கேரளா                            ஆ)ஜம்மு-காஷ்மீர்
இ)ஹரியானா                         ஈ)மேற்கு வங்காளம்

7.ஒரு அமெரிக்கக்குடிமகன் இந்தியாவில் வசித்தால் பின் வரும் எந்த உரிமையை பயன்படுத்த இயலாது
அ)சட்டத்தின்முன் அனைவரும் சமம்
ஆ)தனிமனித சுதந்திரம்
இ)மத சுதந்திரம்
ஈ)வாணிகம் மற்றும் தொழில் சுதந்திரம்


8.பின்வரும் எந்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றவேண்டும்?
அ)சாதாரண மசோதா                  ஆ)பண மசோதா
இ)நிதி மசோதா                       ஈ)சட்டத்திருத்த மசோதா

9.பின்வரும் யார் தலைமைத்தேர்தல் ஆனையர் பதவி வகிக்கவில்லை?
அ)G.S.தில்லான்                       ஆ)R.K.திரிவேதி
இ)S.P.சென்வர்மா                      ஈ)B.B.டாண்டன்

10.பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக
A)ஹரியானா மாநிலம் உதயம்
B)மைசூர் மாநிலம் கர்நாடகம் எனப்பெயர் மாற்றம்
C)திரிபுரா,மேகலாயா மாநில அந்தஸ்து பெறுதல்
D)பாண்டிச்சேரி,யூனியன் அந்தஸ்து பெறுதல்.
அ)A,B,C,D                             ஆ)A,C,D,B
இ)D,A,C,B                             ஈ)C,D,A,B

11.ஒரு பஞ்சாயத்து அமைப்புகள் கலைக்கப்பட்டால்
அ) 6 வாரத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்
ஆ) 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்
இ) 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்
ஈ) 1 ஆண்டிற்குள் தேர்தல் நடத்த வேண்டும்

12.இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் பட்ஜெட்பற்றி குறிப்பிடுவது?
அ)ARTICLE 266                         ஆ)ARTICLE 112
இ)ARTICLE 265                         ஈ)ARTICLE 110

13.மத்திய நிர்வாக தீர்வானையம்,பின்வரும் எந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்?
அ)தேர்வு தொடர்பானவை               ஆ)பதவி உயர்வு தொடர்பானவை
இ)ஒழுங்கு நடவடிக்கை                 ஈ)பணி தொடர்பானவை

14’அகில இந்தியப்பணிகளின் தந்தை’- என அழைக்கப்படுபவர்?
அ)மெக்காலே                         ஆ)காரன்வாலிஸ்
இ)நேரு                               ஈ)வல்லபாய் படேல்

15.மாவட்ட நீதிபதிகளை நியமிப்பவர்?
அ)உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
ஆ)மாநில அரசு பணியாளர் தேர்வானையம்
இ)குடியரசுத்தலைவர்
ஈ)மாநில ஆளுநர்

16.ஒரே நபர், 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் அளுநராக நியமிக்க வழி செய்த சட்டத்திருத்தம்?
அ)4                                  ஆ)7
இ)11                                 ஈ)24

17.பாராளுமன்றத்தில் முதன்முதலில் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
அ)1971                               ஆ)1967
இ)1968                               ஈ)1972

18.தவறானதைத்தேர்க
அ)ARTICLE 153 –  மாநில ஆளுநர்
ஆ)ARTICLE 156 – ஆளுநரின் பதவிக்காலம்
இ)ARTICLE 154 – ஆறுநர் நிர்வாக அதிகாரம்
ஈ)ARTICLE 155 ஆளுநர் பதவி நீக்கம்

19.மாநில சட்ட மேலவையை கலைக்க அதிகாரம் பெற்றவர்?
அ)பாரளுமன்றம்                      ஆ)குடியரசுத்தலைவர்
இ)ஆளுநர்                            ஈ)இதில் எதுவுமில்லை

20.மாநில சட்டமன்றத்தில் பண மசோதாவை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்து பரிந்துரைப்பவர்?
அ)சபாநாயகர்                         ஆ)நிதியமைச்சர்
இ)முதலமைச்சர்                      ஈ)ஆளுநர்
21.பின்வரும் எந்த மாநிலத்தில் ஆளுநர்ஆட்சியை அமல்படுத்தலாம்?
அ)ஜம்மு-காஷ்மீர்                           ஆ)டெல்லி
இ)குஜராத்                                   ஈ)இதல் எதுவுமில்லை

22.இந்திய தேர்தல் ஆனையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்?
அ)நிர்வாகம்                                ஆ)ஆலோசனை
இ)பகுதிநீதி                                 ஈ)இவை அனைத்தும்

23.மாநில மனித உரிமை ஆனையம் தமிழ்நாடு உட்பட எத்தனை மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது?
அ)23                                 ஆ)25
இ)27                                 ஈ)அனைத்து மாநிலங்களிலும்

24.மத்திய தலைமை தகவல் ஆனையரின் பதவிக்காலம்?
அ)6 ஆண்டுகள் (அ) 65 வயது வரை          ஆ)5 ஆண்டுகள்
இ)6 ஆண்டுகள்                                  ஈ)5 ஆண்டுகள் (அ) 65 வயது வரை

25.மாநில நிர்வாகத்தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர்?
அ)குடியரசுத்தலைவர்                  ஆ)ஆளுநர்
இ)இந்திய தலைமை நீதிபதி            ஈ)உயர்நீதிமன்ற நீதிபதி

26.தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி ஆராய 2010-ல் அமைக்கப்பட்ட குழு?
அ)டங்கா குழு                   ஆ)குப்தா குழு
இ)வோரா குழு                   ஈ)கோசுவாமி குழு

27.1992-ல் கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்த “LOOK EASST POLICY”-ஐ வெளியிட்டவர்?
அ)நரசிம்மராவ்                   ஆ)வாஜ்பாய்
இ)மன்மோகன்சிங்               ஈ)தேவகவுடா

28.பாராளுமன்ற அடிப்படை உரிமைகள் உட்பட இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியையும் திருத்த அனுமதித்த சட்டதிருத்தம்?
அ)24-வது சட்ட திருத்தம் 1971          ஆ) 42-வது சட்ட திருத்தம் 1976
இ) 44-வது சட்ட திருத்தம் 1978          ஈ) 38-வது சட்ட திருத்தம் 1975

29.சென்னை மாகாண பெயர்மாற்ற சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
அ)1967                          ஆ)1968
இ)1969                          ஈ)1966

30.பொருந்தாததை தேர்க
அ)மீட்டர் அளவுகோல்      -1மீ
ஆ)வெர்னியர் அளவுகோல்  -0.001 செ.மீ
இ)திருகு அளவி            -0.001 மி.மீ
ஈ)எடையை அளவிடப்பயன்படுவது சுருள்வில் தராசு

31.நிலநடுக்கோட்டு பகுதியில்
அ)புவியின் விட்டம் அதிகம்
ஆ)துகள்களின் திசைவேகம் குறைவு
இ)பொருளின் எடை குறைவு
ஈ)துகள்களின் மையவிலக்கு விசை அதிகம்

32.ஒரு பொருளை குளிர்விக்ககூடிய மிக்குறைந்த வெப்பநிலை
அ)0 K                                ஆ)0 C
இ)-273 C                              ஈ)Aமற்றும் C

33.பொருத்துக
A)பாயில்விதி          -     a)V/t=மாறிலி
B)கனஅளவு விதி      -     b)pv=மாறிலி
C)அழுத்தவிதி         -     c)pv=RT
D)வாயு சமன்பாடு     -     d)P/T=மாறிலி
     1    2     3     4
அ)   b    d    a    c
ஆ)  b    a    d    c
இ)   a    b    c     d
ஈ)   d    c     b    a

34.கீழே தரப்பட்டுள்ள செவியுணர் நெடுக்கங்களில் பொருந்தாதைக்காண்
அ)மனிதன்           -     20Hz       -     20000Hz
ஆ)வௌவால்         -     1000Hz          -     1,50,000Hz
இ)யானை            -     16Hz       -     60,0000Hz
ஈ)டால்பின்கள்        -     70Hz       -     1,50,000Hz

35.பொருந்தாதைக்காண்
அ)86°F          =30°C
ஆ)122°F         =50°C
இ)32°F          =10°C
ஈ)212°F          =100°C

36.காந்த ஒத்திசைவு பிம்பமாக்கல்(MRI) முறைகளில் பயன்படுவது?
அ)திரவ நைட்ரஜன்                    ஆ)திரவ ஹைட்ரஜன்
இ)திரவ ஹீலியம்                          ஈ)திரவ ஆக்ஸிஜன்

37.உயிரித்தொழில்நுட்ப ஊசி மருந்துகளில் குளிரச்செய்யும் குளிரித்தொழில்நுட்ப அமைப்புகள்?
அ)ஹீலியம்                                ஆ)நைட்ரஜன்
இ)அம்மோனியா                      ஈ)குளோரின்

38.இரும்புக்குழாயின்மீது துத்தநாக முலாம் பூசப்படும்போது இரும்புக்குழாய்கள் வைக்கப்பட வேண்டிய மின்வாய்?
அ)நேர்மின்வாய்                       ஆ)எதிர்மின்வாய்
இ)அ மற்றும் ஆ                      ஈ)இவற்றில் ஏதுமில்லை

39.கண்ணாடி ஒளி இழைத்தொழில்நுட்பத்தில் பயன்படுவது?
அ)ஒளிவிலகல்                       ஆ)ஒளி எதிரொலிப்பு
இ)முழு அக எதிரொளிப்பு              ஈ)நிறப்பிரிகை

40.அழுத்த-மின்விளைவு என்ற தத்துவம் பயன்படும் கடிகாரம்
அ)அணு கடிகாரம்                          ஆ)குவார்ட்ஸ் கடிகாரம்

இ)மணல் கடிகாரம்                    ஈ)நீர்க்கடிகாரம்
41.சுழற்சியிலும்,தன்சுழற்சியிலும் சமமான நாட்களை எடுத்துக்கொள்ளும் கோள் எது?
அ)சனி                               ஆ)வியாழன்
இ)வெள்ளி                            ஈ)யுரேனஸ்

42.பொருந்தா இணையைக்காண்
அ)உலகின் மிகப்பெரிய கடல்(MAJOR SEA) -    தென்சீனக்கடல்
ஆ)பூமியில் உள்ள தீர்க்ககோடு மண்டலங்களின் எண்ணிக்கை- 24
இ)சர்வதேசத்தேதிக்கோடு              -     0° தீர்க்ககோடு
ஈ)பூமியின் சுழற்சி வேகம்             -     1670 கி.மீ

43.1907-ல் ஜாம்ஷெட்பூரில் உருவாக்கப்பட்ட TISCO இரும்பு நிறுவனத்திற்கு நீர் தரும் ஆறு எது?
அ)சட்லெஜ்                           ஆ)தாமோதர்
இ)சுவர்ணரேகா                        ஈ)சோன்

44.ஒளியைவிட வேகமாக செல்லும் அல்ட்ராசோனிக் விமானங்கள் எதனுடன் தொடர்புடையது?
அ)TRPOSOSPHERE
ஆ)STRATOSPHERE
இ)MESOSPHERE
ஈ)IONOSPHERE

45.கடற்பரப்புகளில் அதிகளவு காணப்படும் பகுதி?
அ)கண்டத்திட்டு                       ஆ)கண்டஸ்லோப்
இ)ஆழ்கடல் சமவெளி                 ஈ)கண்ட எரிமலைத்தீவு

46.கீழ்க்கண்டவற்றுள் அட்லாண்டிக் பெருங்கடலில் அமையாத நீரோட்டம் எது?
அ)கல்ப் நீரோட்டம்                    ஆ)க்ரோஸியா
இ)பிரேசில்                            ஈ)கானரி

47.அமைதி மண்டலம் (அ) டோல்டுராமஸ் எனப்படுவது?
அ)0°-5° அட்சம்                        ஆ)25°-35° அட்சம்
இ)35°-60° அட்சம்                      ஈ)70°-90° அட்சம்

48.வியாபாரக்காற்று எனப்படுவது?
அ)கிழக்குக்காற்றுகள்                  ஆ)மேற்குக்காற்றுகள்
இ)துருவக்காற்றுகள்                   ஈ) இவை அனைத்தும்

49.பின்னடையும் பருவக்காற்றினால் அதிக மழை பெறும் இந்தியப்பகுதிகள்?
அ)வடமேற்கு இந்தியா                 ஆ)மேற்கு கடற்கரை
இ)கிழக்கு கடற்கரை                   ஈ)சோட்டா-நாக்பூர் பகுதி

50.செங்குத்து மே்கங்கள் எனப்படுவது?
அ)நிம்பஸ்                            ஆ)குமுலஸ்
இ)சிர்ரஸ்                             ஈ)ஸ்ட்ரேடஸ்

51.பேரண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது எனக்கூறியவர்?
அ)எட்வின் ஹப்பிள்                   ஆ)நியூட்டன்
இ)கூடன்பார்க்                         ஈ)அடால்ப் தாமஸ்

52.ஐசோஸ்டெசி என்ற வார்த்தை எதனுடன் தொடர்புடையது?
அ)கிரஸ்டு                            ஆ)மேன்டில்
இ)கோர்                              ஈ)அனைத்தும்

53.வரலாற்றில் பதிவான கண்கவர் எரிமலை எது?
அ)பிராக்யூடின்                        ஆ)மோனலாவா
இ)ஜெயின்ட் ஹெலன்                 ஈ)கெட்டபாக்ஸி

54.அமெரிக்காவின் கொலரடோ ஆற்றின் அரித்தெடுப்பினால் உருவான உலக அதிசயப்பகுதி எது?
அ)அமேசான்                          ஆ)மரண பள்ளத்தாக்கு
இ)ரியோகிராண்டி                      ஈ)கிராண்ட் கெண்யான்

55.பூமியில் அதிகளவு அழிவுகளை ஏற்படுத்தும்நிலநடுக்க அலைகள் எவை?
அ)P-அலைகள்                        ஆ)S-அலைகள்
இ)L-அலைகள்                         ஈ)H-அலைகள்

56.நிலக்கரி எண்ணெய்,இயற்கை வாயு போன்றவற்றின் இருப்பிடமாக திகழும் ஆறை எது?
அ)தீப்பாறை                                ஆ)படிவுப்பாறை
இ)உருமாறிய பாறை                      ஈ)அ (ம) இ.

57.ஹிமாத்ரிக்கும்,சிவாலி மலைத்தொடருக்கும் இடையே அமைந்திருப்பது எது?
அ)பூர்வாச்சல் மலைத்தொடர்                ஆ)ஹிமாச்சல்
இ)காரகோரம்                                  ஈ)பட்காய்

58.உலகின் இரண்டாவது உயர்ந்த சிகரம் எது?
அ)எவரெஸ்ட்                         ஆ)காட்வின் ஆஸ்டின்
இ)நந்த தேவி                         ஈ)நங்க பர்வதம்

59.நர்மதை-தபதி ந்திகளுக்கிடையே அமைந்துள்ள மலை எது?
அ)விந்திய மலை                           ஆ)சாத்பூரா மலை
இ)ஆரவல்லி மலை                   ஈ)சகாயத்தி மலை

60.மேற்கு கடற்கரை சமவெளியும்,கிழக்கு கடற்கரை சமவெளியும் சந்திக்கும் இடம் எது?
அ)நீலகிரி                             ஆ)கன்னியாகுமரி

இ)அ(ம) ஆ                           ஈ)எதுவுமில்லை
61.மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுபடுத்துகிறது?
அ)கார்பன்-டை ஆக்சைடு                    ஆ)சல்பர்-டை-ஆக்சைடு
இ)நைட்ரஸ்-டை-ஆக்சைடு                   ஈ)நைட்ரஜன் ஆக்சைடு

62.தாமோதர் நதி பின்வரும் எந்தப்பகுதியில் பாய்கிறது?
அ)தக்காண பீடபூமி                         ஆ)மாளவ பீடபூமி
இ)பண்டல்கண்ட் உயர்நிலம்                 ஈ)சோட்டா-நாக்பூர் பீடபூமி

63.தவறானதைச்சுட்டுக

சாகுபடி முறை                        மாநிலம்
அ)ஜீம் முறை              -          அஸ்ஸாம்
ஆ)பொன்னம்               -          பீகார்
இ)மாசன்                  -          மத்தியபிரதேசம்
ஈ)பொடு                   -          ஆந்திரா

64.இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது?
அ)சணல்                                   ஆ)பருத்தி
இ)கேழ்வரகு                               ஈ)பார்லி

65.1832-ல் முதல் காகித தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
அ)ரிஸ்ரா(மே.வ)                            ஆ)செராம்பூர்(மே.வ)
இ)கான்பூர்                                 ஈ)கோவை

66.இந்தியாவின் பரபரப்பான(BUSIEST) துறைமுகம்?
அ)காண்ட்லா                               ஆ)மும்பை
இ)சென்னை                                     ஈ)கொச்சின்

67.மிகநீளமான இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப்பாதை எது?
அ)அலகாபாத்-ஹால்டியா                    ஆ)சையதியா-துபரி
இ)கோட்டபுரம்-கொல்லம்                    ஈ)மங்கல்காடி-பிரதீப்

68.ஏலக்கானா ரயில்வே பணிமனை எங்குள்ளது?
அ)அஸ்ஸாம்                               ஆ)கர்நாடகா
இ)மேற்கு வங்காளம்                        ஈ)கேரளா

69.உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டம் எங்குள்ளது?
அ)சிவசமுத்திரம்                           ஆ)முப்பள்ளத்தாக்கு
இ)அமேசான்                               ஈ)சேதுசமுத்திரம்

70.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடித்தளம் எது?
அ)டாகர் திட்டு                             ஆ)கிராண்ட்பேங்
இ)போலார்                                 ஈ)டோன்லேசாப்

71.பின்வரும் மாநிலங்களில் குளிர்காலத்தில் அதிக மழையை பெறுவது?
அ)குஜராத்                                 ஆ)மேற்கு வங்கம்
இ)மத்தியபிரதேசம்                         ஈ)தமிழ்நாடு

72.இந்தியாவில் முதன்முதலில் காபி சாகுபடி நடைபெற்ற பகுதி?
அ)கேரளா                                  ஆ)கர்நாடகா
இ)தமிழ்நாடு                               ஈ)மேற்கு வங்கம்

73.தவறான இனையை காண்க.
அ)CECRI         -          காரைக்கால்
ஆ)NEERI         -          நாக்பூர்
இ)CLRI          -          சென்னை
ஈ)SITRA          -          கோவை

74.நீரில் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனின் பருமனளவு விகிதம்?
அ)2:1                                      ஆ)1:2
இ)1:4                                      ஈ)4:1

75.ஆழ்கடல் முத்துக்குளிப்போர் சுவாசிக்கப்பயன்படுத்தும் வாயுக்கலவை எது?
அ)ஆக்ஸிஜன்-நைட்ரஜன்                    ஆ)ஆக்ஸிஜன்-ஹீலியம்
இ)ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன்                  ஈ)ஆக்ஸிஜன்-CO2

76.ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டை கண்டறிந்தவர்?
அ)நியூட்டன்                                ஆ)ஐன்ஸ்டின்
இ)தாம்சன்                                 ஈ)சாட்விக்

77.வேதி எரிமலை என அழைக்கப்படும் சேர்மம்
அ)பொட்டாசியம்-டை-க்ரோமேட்        ஆ)அம்மோனியம்-டை-க்ரோமேட்
இ)பொட்டாசியம் க்ளோரேட்            ஈ)அம்மோனியம் கார்பனேட்

78.கீழே தரப்பட்டுள்ள உப்புகளில் அமில நீக்கியில் உள்ள பகுதி?
அ)சலவை சோடா(Na2CO3)              ஆ)சமையல்சோடா(NaHCO3)
இ)சலவைத்தூள்(CaOCL2)                     ஈ)சாதாரண உப்பு(NaCl)

79.வார்ப்பிரும்பிலுள்ள கார்பனின் அளவு?
அ)0.25%-2%                            ஆ)2%-4.5%
இ)0.25%க்கும் குறைவு                  ஈ)4.25%-5%

80.பற்குழிகளை அடைக்க உதவும் உலோக கலவை?
அ)Ag-Sn                         ஆ)Cu-Sn
இ)Au-Sn                         ஈ)Al-Sn
81.2014,மார்ச் 27-ல் ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த நாடுகள் எண்ணிக்கை?
அ)32                                 ஆ)23
இ)21                                 ஈ)12

82.G-8 அமைப்பிலிருந்து சமீபத்தில்நீக்கப்பட்ட நாடு?
அ)ரஷ்யா                             ஆ)ஜப்பான்
இ)பிரான்ஸ்                                ஈ)இலங்கை

83.NATO அமைப்பின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் எந்நாட்டைச்சார்ந்தவர்?
அ)அமெரிக்கா                         ஆ)சுவிட்சர்லாந்து
இ)கனடா                             ஈ)நார்வே

84.கீழ்கண்ட எந்த துறைமுகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
அ)எண்ணூர்                                ஆ)தூத்துக்குடி
இ)நாகப்பட்டிணம்                      ஈ)வேதாரண்யம்

85.2013-ம் ஆண்டு சிறந்த விளையாட்டுவீரருக்கு வழங்கப்படும் லாரஸ் விருது பெற்றவர் யார்?
அ)சச்சின் டெண்டுல்கர்                ஆ)செபாஸ்டியன் விட்டல்
இ)விராட் கோலி                      ஈ)செரினா வில்லியம்ஸ்

86.கீழ்கண்ட எந்த மாநிலம் இந்தியத்திட்ட நேரத்தை விலக்கி தனியாக உள்ளூர் நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
அ)கேரளம்                            ஆ)அஸ்ஸாம்
இ)ஜம்மு-காஷ்மீர்                           ஈ)உத்திரகாண்ட்

87.ICC-பெண்கள் உலக கோப்பை T-20 போட்டியில் கோப்கையை வென்ற நாடு?
அ)இங்கிலாந்து                        ஆ)ஆஸ்திரேலியா
இ)இந்தியா                            ஈ)இலங்கை

88.சமீபத்தில் இட்டா புயல் எந்த நாட்டைத்தாக்கியது?
அ)ஆஸ்திரேலியா                          ஆ)கோஸ்டாரிகா
இ)வியட்நாம்                          ஈ)அமெரிக்கா

89.பிகு பண்டிகை கீழ்கண்ட எந்த மாநிலத்தில் கொண்டாட படுகிறது?
அ)பீகார்                              ஆ)ஜார்கண்ட்
இ)அசாம்                             ஈ)மேகலாயா

90.மேற்கு வங்கத்தில் கிளைகளை அதிகளவில் திறக்கவுள்ள புதிய வங்கி?
அ)IDFC                               ஆ)BFSPL
இ)FDICB                              ஈ)PSLFB

91.மார்ச் 8,2014 அன்று காணமல் போன மலேசிய விமாணம் MH370-ல் இருந்தவர்கள் எண்ணிக்கை?
அ)219                                ஆ)329
இ)239                                ஈ)293

92.உலக தண்ணீர் தினம் அணுசரிக்கப்படும் நாள்?
அ)மார்ச் 21                           ஆ)மார்ச் 22
இ)மார்ச் 23                           ஈ)ஏப்ரல் 7

93.2014-ம் ஆண்டு ரயில்வே போக்குவரத்தில் இனைந்த மாநிலம்?
அ)திரிபுரா                            ஆ)மேகலாயா
இ)மிசோரம்                                ஈ)அருணாச்சல்

94.ISO 9001:2008 சான்று பெற்ற முதல் இந்திய அமைச்சரகம்?
அ)ஜவுளி                             ஆ)வர்த்தகம்
இ)எஃகு                               ஈ)நிலக்கரி

95.புகையில்லா புகையிலையை தடை செய்துள்ள முதல் மாநிலம்?
அ)பீகார்                              ஆ)மீசோரம்
இ)அசாம்                             ஈ)நாகாலாந்து

96.தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம்?
அ)திருச்சி                            ஆ)காந்திநகர்
இ)திருவனந்தபுரம்                          ஈ)கர்னூல்

97.ராஜிவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள இடம்?
அ)ஹைதராபாத்                       ஆ)கொல்கத்தா
இ)பெங்களூர்                          ஈ)சென்னை

98.44-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்ற இடம்?
அ)பனாஜி                             ஆ)மும்பை
இ)டெல்லி                            ஈ)சென்னை

99.9-வது WTO அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற இடம்?
அ)பாரிஸ்                             ஆ)ஜெனீவா
இ)நியூயார்க்                          ஈ)பாலி

100.2014-க்கான பசுமை நோபால் பரிசைப்பெற்றவர்?
அ)ரமேஷ் அகர்வால்                   ஆ)மீனு வெங்கட்

இ)குர்தாஷ் சிங்                       ஈ)A.K.மாதவ்ஸ்       



No comments:

Post a Comment