அறிவியல் கருவிகளும் அவற்றின்
பயன்பாடுகளும்:
·
அம்மீட்டர்
(Ammeter): மின்னோட்டத்தின்
வலிமையை அளக்க உதவுவது
·
அலிமோ
மீட்டர் (Anemometer): காற்றின்
வேகமும், வீசும்
திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.
·
ஆடியோ
மீட்டர் (Audiometer): கேள்வித்
திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.
·
ஆல்டி
மீட்டர் (Altimeter): குத்துயரங்களை
அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.
·
எலக்ட்ரோஸ்கோப்
(Electrosospe): மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி
·
கம்யுடேட்டர்
(Commutator): மின்னோட்டத்
திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.
·
கோலரிமீட்டர்
(Colorimeter): நிறங்களின்
தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.
·
கலோரி
மீட்டர் (Calorimeter): வெப்பத்தை
அளக்க உதவும் வெம்மையளவி
·
கால்வனோமீட்டர்
(Calvanometer): மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.
·
கிளினிக்கல்
தெர்மோமீட்டர் (Clinical Thermometer): மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி
·
குரோனா
மீட்டர் (Chronometer): கடல்பயணத்தில்
தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால
அளவி.
·
சாலினோ
மீட்டர் (Salinometer): உப்புக்
கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன் மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை
தரவமானி (உப்புக்கரைசல்
அளவி)
·
செய்ஸ்மோ
கிராஃப் (Seismograph): நில
நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி
·
குவாட்ரண்ட்
(Quadrant): பயண
அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி.
·
டிரான்சிஸ்டர்
(Transistor) : மின்னாற்றலை
மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.
·
டெலிபிரிண்டர்
(Teleprinter): தொலை தூர
இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும்
உதவும் தொலை எழுதி.
·
டெலி
மீட்டர் (Telemeter): வான்
பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கருவி (தொலை அளவி)
·
டெலஸ்கோப்
(Telescope): தொலைதூரப்
பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.
·
டைனமோ (Dynamo): இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக
மாற்றும் கருவி
·
டைனமோ
மீட்டர் (Dynamometer): மின்
திறனை அளக்க உதவும் மின்திறனளவி.
·
தெர்மோ
மீட்டர் (Thermometer): வெப்ப
நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி
·
தெர்மோஸ்கோப்
(Thermoscope): வெப்பத்தால்
ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு
·
மாற்றங்களைக்
கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும்
·
வெப்பங்காட்டி
·
தெர்மோஸ்டாட்
(Thermostat): ஒரு
பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி)
·
பாரோமீட்டர்
(Barometer): வளிமண்டல
அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.
·
பிளான்டி
மீட்டர் (Plantimeter): சமதளப்பரப்பளவைத்
தொகுத்தளிக்க உதவும் கருவி
·
பெரிஸ்கோப்
(Periscope): நேரிடைக்
கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின்
·
காண்பவர்
கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது.
·
பைக்னோ
மீட்டர் (Phknometer): நீர்மத்தின்
அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion): அளக்க
உதவும் அடர்வளவி.
·
பைனாகுலர்கள்
(Binoculars): தொலை
தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி
·
பைரோ
மீட்டர் (Pyrometer): உயர்வெப்ப
நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.
·
மாக்னடோ
மீட்டர் (Magneto Meter): காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic
·
Moments), புலங்களையும் (Fields) ஒப்புநோக்க உதவும் காந்த அளவி
·
மானோ
மீட்டர் (Manometer): வளிமங்களின்
அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி
·
மரீனர்ஸ்
காம்பஸ் (Mariner’s Compass): முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி
·
மைக்ரோ
மீட்டர் (Micrometer): சிறு
தொலைவுகள் மற்றும் கோணங்களைத் துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.
·
மைக்ரோஸ்கோப்
(Microscope): நுண்ணிய
பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண்காட்டி
·
ரிஃப்ராக்டோ
மீட்டர் (Refractometer): ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.
·
ரெசிஸ்டன்ஸ்
தெர்மோ மீட்டர் (Resistance Thermometer): வெப்பத்தால் மின்
·
கடத்திகளின்
தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய
·
உதவும்
மின்தடை வெப்ப அளவி.
·
ரெயின்கேஜ்
(Raingauge): மழைப்பொழிவை
அளக்க உதவும் மழை அளவி.
·
ரேடியோ
மைக்ரோமீட்டர் (Radiomicro meter): வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண்ணளவி
·
லாக்டோ
மீட்டர் (Lactometer); பாலின்
ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது
·
வெர்னியர்
(Vernier): அளவுகோலின்
மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்தமாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.
·
வோல்ட்
மீட்டர் (Voltmeter): இரு
புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.
·
ஸ்டெதஸ்கோப்
(Stethoscope): இதயத்தின்
நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி.
·
ஸ்பிக்மோமானோ
மீட்டர் (Spygmomano Meter): இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.
·
ஸ்பிரிங்
பாலன்ஸ் (Spring Balance): பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.
·
ஸ்பெக்ட்ரோ
மீட்டர் (Spectrometer): ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில்
திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி.
·
ஸ்பெக்ட்ரோஸ்கோப்
(Spectroscope): மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும்
நிரல்மாலைகாட்டி.
·
ஸ்ஃபியரோ
மீட்டர் (Spherometer): கோளக வடிவப் பொருட்களின்
வளைவைத் துல்லியமாக அளக்க உதவும் கோள அளவி.
·
ஹைக்ரோ
மீட்டர் (Hygrometer): வளிமண்டல ஒப்பு ஈரப்பத அளவி
(relative Humidity)
·
அளந்திட
உதவும் கருவி
·
ஹைக்ரோஸ்கோப்
(Hygroscope): வளி மண்டல ஈரப்பதத்தின் அளவு மாற்றங்களைக் கண்டறிய
·
உதவும்
ஈரப்பதங்காட்டி
·
ஹைட்ரோஃபோன்
(Hydrophone): நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் நீரொலி வாங்கி
ஹைட்ரோமீட்டர் (Hydrometer) நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.
No comments:
Post a Comment