Thursday 13 February 2014

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் 


தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும்.

தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 

இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். 

பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது.

தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அமைப்புகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பெரியகுளம், உத்தமபாளையம் இரண்டு வருவாய்க் கோட்டங்கள், இந்த வருவாய்க் கோட்டங்களின் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என்று ஐந்து தாலுகா அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வருவாய்க் கிராமங்கள்

முதன்மைக் கட்டுரை: தேனி மாவட்ட வருவாய்க் கிராமங்கள்
இம்மாவட்டத்தில், ஆண்டிபட்டி வட்டத்தில் 25 வருவாய்க் கிராமங்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 15 வருவாய்க் கிராமங்களும், தேனி வட்டத்தில் 12 வருவாய்க் கிராமங்களும், பெரியகுளம் வட்டத்தில் 22 வருவாய்க் கிராமங்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 39 வருவாய்க் கிராமங்களும், என வருவாய்த்துறை அமைப்பின் கீழ் 113 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிலுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் (முன்பு தலையாரி என்று அழைக்கப்பட்டனர்) உள்ளனர்.
காவல்துறை அமைப்புகள்

தேனி மாவட்டக் காவல்துறை

தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
தேனி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான காவல்துறையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஒன்றும், இதன் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய 5 இடங்களில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களும், இதன் கீழ் சட்டம்- ஒழுங்கிற்கான 30 காவல் நிலையங்களும், 4 மகளிர் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள்

முதன்மைக் கட்டுரை:

தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் , இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராமப் பஞ்சாயத்துக்களும் என உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி உள்ளாட்சித்துறை அலுவலர்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

சட்டமன்றத் தொகுதிகள்(2011)

இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் தேனி மாவட்டத்தில் இருந்த தேனி சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டுவிட்டது. தற்போது தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 4 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. 

இந்த நான்கு தொகுதிகளில் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரம்:

ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) - தங்க தமிழ்ச்செல்வன் - அ.இ.அ.தி.மு.க

போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) - ஓ. பன்னீர்செல்வம் - அ.இ.அ.தி.மு.க

பெரியகுளம் (தனி)சட்டமன்றத் தொகுதி - ஏ. லாசர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கம்பம் (சட்டமன்றத் தொகுதி) - என். இராமகிருஷ்ணன் - தி.மு.க

சுற்றுலாத் தலங்கள்

சுருளி நீர்வீழ்ச்சி
தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் என்று 8 இடங்கள்உள்ளது.

வைகை அணை
முல்லைப் பெரியாறு அணை
சோத்துப்பாறை அணை
சுருளி நீர் வீழ்ச்சி
கும்பக்கரை அருவி
மேகமலை
வெள்ளிமலை
போடி மெட்டு

கோயில்கள்

சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்
இம்மாவட்டத்தில் பிரபலமாக விளங்கும் சில கோயில்கள்.
குச்சனூர் சனீஸ்வரன் கோயில்
வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்
வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில்
பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில்
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்
சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்
வீரப்ப அய்யனார் கோயில்
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்
சித்திர புத்திர நாயனார் கோயில்
வேலப்பர் கோயில்

மின் உற்பத்தி நிலையங்கள்

வைகை நுண் புனல் மின் நிலையம்
தேனி மாவட்டத்திலுள்ள ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை
பெரியார் நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்
சுருளியாறு நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்
வைகை நுண் புனல் மின் நிலையம்.
இவை தவிர தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் காற்றைப் பயன்படுத்தி காற்றாலைகள் கொண்டு மின் உற்பத்தி செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment