Monday 3 March 2014

இராமலிங்க அடிகளார்-தமிழ் அறிஞர்கள்





இராமலிங்க அடிகள் துறவியைப் போல வாழ்ந்தாலும், தன் மீது அன்பு கொண்ட அன்பர்களுக்காகவும், அடியார்களுக்காகவும் மிகவும் மனம் இரங்குவார். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கண்டு மனம் வருந்துவார். வடலூர் இராமலிங்க அடிகள் தமிழ், வடமொழி மற்றும் பல மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். எளியோரை வாழ்விக்க வந்த வள்ளல்.

பிறப்பு: தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள அமைந்திருக்கும் மருதூர் என்னும் சிறிய கிராமத்தில் ஊரின் கணக்குப்பிள்ளையாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமைய்யா. இவர் மனைவி பெயர் சின்னம்மையார், திருவள்ளூர் மாவட்டத்தில் போன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்தவர் .

இராமையாவுக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவர் சின்னம்மையார் .முன் திருமணம் செய்த ஐந்து மனைவியருக்கும் குழந்தை பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே இராமைய்யா இவரை ஆறாவது மனைவியாக மனம் புரிந்தார். 

இராமையா மனைவி சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர். இராமலிங்க சுவாமிகள் பிறந்த எட்டு மாதத்திலேயே தந்தை இராமையாப் பிள்ளை சிவலோகம் அடைந்தார்.

சிதம்பர தரிசனம்: பிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச சென்று வழிபடுவது அக்கால வழக்கம் .அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் மாதம் இராமையா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார்கள் .சிதம்பரத்தில் உள்ள சிற்சபையில் நடராஜ பெருமானை வழிப்பட்ட பின் சிதம்பர சகசியம் என்னும் திரையை தூக்கி தரிசனம் காட்டப் பெற்றது .அனைவரும் தரிசித்தனர். அந்த சமயம், கைக் குழைந்தையாகிய இராமலிங்கமும் தரிசித்தார். அனைவருக்கும் இரகசியமாய் இருந்த சிதம்பர ரகசியத்தை பார்த்த இராமலிங்கம் கல கல வென்று சிரித்தது. அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர் .சிதம்பரம் கோயில் பூசகராக இருந்த அப்பையா தீஷ்சதர் என்பவர் குழந்தை சிரிப்பு ஒலியைக் கண்டு கேட்டு ஆச்சரியப்பட்டு போயினர் .பல ஆண்டுகளாக இக்கோயிலில் நான் வேலைப் பார்க்கிறேன் பல குடும்பங்கள் குழைந்தைகளுடன் தரிசனம் பார்க்க வந்துள்ளார்கள். இப்படி ஒரு ஞான குழைந்தையை நான் பார்த்ததே இல்லை எனக்கருதி, இராமையாவிடம், இக்குழைந்தையை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதின் பேரில், குருக்கள் வீட்டிற்கு இராமையா குடும்பத்துடன் சென்றார் .

அப்பையா தீஷ்சதர் குழைந்தையை பெற்று கீழே படுக்க வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து குழைந்தை இராமலிங்கத்தை வணங்கினார். அதைப் பார்த்த இராமையா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் அதிசியத்தினர். பின் அவர்களுக்கு தேநீர் கொடுத்து மகிழ்ந்தார் .

இக் குழைந்தை சாதாரணக் குழைந்தை அல்ல கடவுளின் குழைந்தை அருள் ஞானக் குழைந்தை, இக்குழைந்தை என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு அடியேன் என்ன புண்ணியம் செய்தோனோ என்று மனம் உருகி ஆனந்தக் கண்ணீர் தழும்ப வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் அப்பைய தீஷ்சதர்.

ஆண்டவர் காட்சி கொடுத்தல்: அனைவருக்கும் இரகசியமாக இருந்த சிதம்பர ரகசியத்தை ஐந்து மாதக் குழைந்தையாக இருந்த இராமலிங்க பெருமகனார்க்கு வெட்ட வெளியாக புலப்பட்டது. இறைவன் ரகசியத்தை வெளிப்படையாகக் காட்டி அருளினார் திரை தூக்கத் தாம் வெளியாகக் கண்ட அனுபவத்தை அவருடைய நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டில் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் அருள் விளக்க மாலை என்னும் தலைப்பில் அருட்பாடலாக எழுதி வெளிப்படுத்துகிறார் . 

சென்னைக்கு குடியேறுதல்: ராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான போன்னேரிக்குச சென்றார் சிலகாலம் பொன்னேரியில் வாழ்ந்த பின்பு தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார்.பின் புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.

ஓதாது உணர்தல்: இராமலிங்கப் பெருமானுக்கு பள்ளிப்பருவம் எய்தியதும் அண்ணன் சபாபதி தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார் .பின்னர் தான் பயின்ற ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார்.

ஆசிரியர் சபாபதி சக மாணவர்களுடன் அமரச் சொன்னார் .இராமலிங்கமோ தனியாக அமர்ந்து கொண்டார் அதை கவனித்த ஆசிரியர் கண்டு கொள்ளாதது போல் பாடம் நடத்த ஆரம்பித்தார் .அன்று இராமலிங்கத்திற்கு முதல் நாள் முதல் பாடமாகும். ஆசிரியர் சொல்ல அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும். ஆசிரியர் சொன்ன பாடல்

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்

என்ற பாடலை ஆசிரியர் சொல்ல, இராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் சொன்னார்கள். இராமலிங்கம் சொல்லாததைக் கவனித்த ஆசிரியர் ஏன் நீ சொல்ல வில்லை என்று கொஞ்சம் அதட்டலான குரலில் கேட்க்க, அதற்கு தயங்கி பதில் சொல்லாமல் இருந்தார் இராமலிங்கம். மீண்டும் நான் கேட்கிறேன் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறாய் வாய் திறந்து பேசுடா என்று மிரட்டுவது போல் கேட்டார் ஆசிரியர் .

அப்போது இராமலிங்கம் ஐயா நீங்கள் நடத்திய பாடத்தில் ஒவ்வொரு வரியிலும் அமங்கலமான வார்த்தையில் முடிகிறது ஆதலால் நான் அப்படி சொல்ல விரும்ப வில்லை என்று பதில் அளித்தார் .ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. என்ன அருமையான கருத்து கலந்த வரிகள் உள்ள பாடலாகும் அதைப்போய் அமங்கலம் என்று சொல்கிறாய். அப்படியானால் நீ பெரிய அறிவாளியா? உங்கள் அண்ணன் சபாபதி என்னிடம் பயின்று இன்று பெரியபுராண சொற்பொழிவாளராகி குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறார். அவருடைய தம்பியாகிய நீ இப்படி குதற்கமாக பேசுகிறாயே என்று வினவியதுடன் .அப்படியானால் நீயே ஒரு பாடலை சொல் பார்ப்போம் என்று கிண்டலாக அதட்டி கேட்க்க. (இதற்கு அருட்பாவில் ஆதாரம் இல்லை)

இராமலிங்கம் மிகவும் மிகுந்த மரியாதையுடன் பாடலை பாட ஆரம்பித்தார் .அவர் பாடிய பாடல் வருமாறு...

ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற

உத்தமர் தம் உறவு வேண்டும்

உள் ஒன்று வைத்துப் புறம ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியாது இருக்க வேண்டும்

மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை

மறவாது இருக்க வேண்டும்

மதி வேண்டும் நின கருணை நிதி வேண்டும் நோயற்ற

வாழ்வில் நான் வாழ வேண்டும்

வேண்டும் வேண்டும் என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் .அதைக் கேட்ட ஆசிரியர் அதிசயித்து போயினர். அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் அமைதி யாயினார்கள். இராமலிங்கம் உனக்கு பாடம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை .ஏதோ சிறு பிள்ளை என்று மிரட்டி விட்டேன் என்னை மன்னித்துவிடு என்று குரல் கம்மிடவும் குறு நா உளறவும் படபடத்து பதில் உரைத்தார் .

இராமலிங்கரின் அறிவுத் தரத்தையும், பக்குவ நிலையையும்,கந்தக் கோட்டஞ் சென்று கவி பாடும் திறமையையும் கண்ட மகா வித்துவான், --இராமலிங்கம் கல்லாது உணரவும்,சொல்லாது உணரவும், உணர்த்தவும் வல்லவர் என்று உணர்ந்து கல்விக் கற்பிப்பதை கைவிட்டு விட்டார்

அன்றிலிருந்து பள்ளிக்கு செல்லாமல் சென்னையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச் சென்று கந்த கோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி அடைந்தார். இளம் வயதிலேயே இறைவன் மீது பல பாடல்களை இயற்றிப் பாடினார்.

இராமலிங்கப் பெருமான் எந்த பள்ளியிலும் பயின்றதும் இல்லை, எந்த ஆசிரியரிடத்தும் படித்தது இல்லை. கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார் கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். கல்வியும், கேள்வியும் கருத்தும் இறைவனிடமே பெற்றதே தவிர வேறு யாரிடமும் கற்கவில்லை,வேறு எந்த நூல்களில் இருந்தும் படித்து தெரிந்து கொள்ளவில்லை என்பதை உலக மக்கள் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் இராமளிங்கப் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினார். குமாரப்பருவத்திலே என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்திற் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்வியை, என் உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று உரைநடைப் பகுதியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில் எழுதி வைத்துள்ளார்.

தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி: இடம்பத்தையும் ஆராவாரத்தையும், பெருமறைப்பையும், போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது, பயிலுதற்கும், அறிதற்கும் மிகவும் லேசுடையதாய், சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருஅருள் வலத்தாற் கிடைத்த தென்மொழியாகிய தமிழ் மொழி யினிடத்தே மனதை பற்ற செய்து அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாட்டுவித்து அருளினீர் என்று தமிழ் மொழியின் சிறப்பினையும் தெளிவுப் படுத்துகிறார்

கந்தகோட்ட வழிபாடு: கல்வி கற்க பள்ளிக்கு செல்லாத இராமலிங்கம் வீட்டிலும் தங்காமல் பள்ளிக்கும் செல்லாமல் நாள்தோறும் சென்னையில் உள்ள கந்த கோட்ட முருகப் பெருமானைப் பாடி வழிபடுவதை வழக்கமாக கொண்டார்கள். கந்தசாமிக் கோயில் என்று வழங்கப் பெற்ற அதனைக் கந்தக் கோட்டம் என வழங்கத் தொடங்கியவர் இராமலிங்கப் பெருமானாரே.

ஒரு கட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

உணவு: இராமலிங்கம் உணவைப்பற்றி எப்போதும் நினைத்ததில்லை, பசி எனபது என்னவென்று தெரியாமல் இறைவன் மீது பற்றுக் கொண்டு தோத்திரம் செய்வதும், பாடல் இயற்றுவதுமே அவர் பெரும்பணியாகக் கொண்டார். வீட்டில் உணவு இல்லாவிட்டாலும், அவர் பசியை அறிந்து இறைவனே உணவு வழங்கி பசியைப் போக்கியுள்ளார் .

இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே இராமலிங்கம், அவர்ப் பசியைப் போக்குவது இறைவன் கடமை அல்லவா! ஆதலால் இறைவனே எக்காலத்தும் அவர் பசியைப் போக்கியுள்ளார் இருந்தாலும் தன்னுடைய அண்ணியார் அன்பில் கட்டுப்பட்டு வீட்டிற்கு வருகிறேன் என்று ஒப்புதல் அளித்தார். 

ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சி யளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

சொற்பொழிவு: சென்னையில் மிகவும் பிரபலமானவர் சோமு என்பவராகும் ,தங்கம் வைரம் வியாபாரம் செய்யும் தொழில் உடையவர்,அவர் ஒவ்வொரு வருடமும் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பெரிய பெரிய வித்துவான்களை வரவழைத்து சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம்.

அந்த வருடம் இராமலிங்கம் அண்ணார் சபாபதியை புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.சபாபதி சொற்பொழிவு என்றால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் 

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, அன்று உடல்நலம் குன்றியதால் ஒப்புக் கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சபாபதியின் சொற்ப் பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அண்ணன் சொன்ன படியே, அண்ணாருடைய நிலைமையை சோமு ஐயா அவர்களிடம் எடுத்துரைத்தார், வேண்டா வெறுப்பாக சம்மதித்து ஒப்புக் கொண்டார். சபாபதி அவர்கள் வரவில்லை என்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சியை இழந்தனர், கூட்டத்தில் சலசலப்பு காணப்பட்டது .

இராமலிங்கம் விழா மேடைக்கு வந்தார். எல்லோரும் அதிசியமும் ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தார்கள் .

இராமலிங்கம் சேக்கிழார் பாடிய ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன், நிலவுளாவிய நீர் மலிமேனியன் ,அலகில் சோதியன் அம்பலத்து ஆடுபவன் .அவன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்'' என்ற பாடலை மனமுருகப் பாடி அதற்கு விளக்கம் சொன்னார். அவற்றைக் கேட்ட மக்கள் உணர்வின்றி மெய்சிலிர்த்துப் போனார்கள். அதுதான் இராமலிங்கத்தின் கன்னி சொற்பொழிவாகும். அதன்பின் அவரிடம், சோமு ஐயா அவர்களும் மற்றும் உள்ள பெரியவர்களும் மறுநாளும் நீங்களே வந்து ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்றும், மற்றும் அங்கு கூடியிருந்தோர் அனைவரும் வெகுநேரம் வற்புறுத்தினர். ராமலிங்கமும் அதற்கு அண்ணாரைக் கேட்டு ஒப்புதல் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

மறுநாள் காலையில் சோமு ஐயா அவர்கள் ,தன்னுடைய சவாரி வண்டியில் சபாபதி வீட்டிற்குச் சென்றார். சாபாபதியைப் பார்த்து இன்று உன்னுடைய தம்பி இராமலிங்கத்தை சொற்பொழிவு செய்ய அனுப்பவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் .சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை. சரிங்க ஐயா அப்படியே அனுப்பி வைக்கிறேன் என்று ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்தார் .

தன்னுடைய மனைவி பாப்பாத்தியை அழைத்து, இது என்ன அதிசயம் என்று ஒருவருக்கொருவர் பேசி அதிசயித்துப் போனார்கள் இராமலிங்கமா! என் தம்பி இராமலிங்கமா! எனக்கு ஒன்றும் புரியவில்லை உனக்கு ஏதாவது புரிகிறதா தெரிகிறதா என்று தன மனைவியிடம் கேட்டார். எனக்கு இராமலிங்கத்தைப் பற்றித் தெரியும் ஆனால் இப்படி இந்த அளவிற்கு தெரியாதுங்க என்று கண்களில் நீர் பெருக உணர்ச்சி வசப்பட்டவராக பதில் அளித்தார் .

ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்து வந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபடுவது வழக்கமாகக் கொண்டார்.

வழிபடும் காலங்களில் கருத்தாழமுள்ள பக்திப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் பாடியும் எழுதியும் வைத்துள்ளார் .கருத்து வேறுபாடு இல்லாமல் அனைத்து தெய்வங்கள் பற்றியும் பாமாலை இயற்றி உள்ளார்,அவை அனைத்தும் மக்களுக்காக பாடியதாகும். தான் பாடிய பாடல்கள் அனைத்தும் பக்தி பாடல்களாக இருந்தாலும், உண்மையான தெய்வத்தை தேடிக்கொண்டே இருந்தேன், இந்த சிலைகள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார். மாயை என்னும் இந்த உடம்பில் வாழ்ந்ததால் தத்துவ உருவங்களைப் பற்றி பாடல்பாட நேர்ந்தது. ஆன்மாவின் விழிப்பால் உண்மையான தெய்வத்தை தேடிக் கொண்டு உள்ளேன். உலகில் அனைத்தையும் உன்னுடைய சாயையால்தான் பார்க்கிறேன் என்றார்.

திருமணம்: பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய அக்காள் மகள் தனக்கோட்டி, "தன்னுடைய தாய் மாமன் வள்ளலாரைத் திருமணம் செய்து கொள்வதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் உள்ளார் என்பதை அறிந்து கொள்கிறார் வள்ளலார். தனக்கோட்டியின் குணம் இராமலிங்கத்திற்கு தெரியும். இராமலிங்கத்தின் குணம் தனக்கோட்டிக்குத் தெரியும். ஆதலால் இருவரும் சமத்திக்கின்றனர், உலக வழக்கபடி திருமணம் நடைபெறுகிறது.

முதல் இரவு இருவரும் உள்ளே சென்று அமைதியுடன் உட்கார்ந்து இருக்கிறார்கள். பருவத்தின் தலைவாசலில் கால் வைத்திருக்கும் கன்னிப் பெண் தனக்கோடி எத்தனை ஆயிரம் ஆசைகளை செஞ்சிலே தேக்கிக் வைத்துக் கொண்டு இங்கே வந்து அமர்ந்திருப்பாள் என நினைக்கத் தோன்றும். அவள் அமைதியாக அமர்ந்து இருக்கிறாள் .

இராமலிங்கம் ''தனக்கோடி'' யைப் பார்த்து பேச தொடங்குகிறார். திருமணம் ஆன பெண்ணும், ஆணும் உள்ளம் கலந்து, உயிர்கலந்து, பின் உடல்கலந்து மகிழ வேண்டும் என்பதற்கே இந்த முதல் என்ற ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் நமக்காக உருவாக்கி உள்ள இந்த ''முதல் இரவு ''நீயும் நானும் தனிமையில் சந்தித்துப் பேசும் ''கடைசி இரவு ''என்பதை நீ அறிவாயா? என்று கேட்கிறார். அதற்கு எல்லாம் எனக்குத் தெரியும் என்கிறார் தனக்கோடி.

''
நீங்கள் ஆசைகளை வென்றவர்! நான்... ஆசைகளைக் கொன்றவள்! என ஆசைகள் செத்து விட்டன..! உங்களை நான் கடவுளாகக் கருதினேன்! இது யாருக்கும் தெரியாது! எனக்கு மட்டும்தான் தெரியும் ! எப்படியும் உங்களை கணவனாக அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவிடமும் பாட்டியிடமும் சொல்லி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன்! அதன்படி நம்முடைய திருமணம் நடந்தது!.

இராமலிங்கம் பிரமை பிடித்தவராக, தனக்கோடி சொல்வதை மேலும் கேட்டுக் கொண்டு உள்ளார்!

''
உங்களை முழுவதுமாக உரிமை கொண்டாட வேண்டும் எனற பேராசைதான் உங்கள் மேல் காதலாக மலர்ந்தது. இப்போதுதான் என உள்ளம் குளிர்ந்த்து. உங்களை என்னைத் தவிர வேறு யாரும் தொட்டுவிடக் கூடாது,

''
தனக்கோடி நீ...நீயா ...பேசுகிறாய் "' ''ஆமாம் தனக்கோடி தான் பேசுகிறேன்....முன்னைவிட இப்போது எனக்கு உயர்வாகத் தோன்றுகிறீர்கள்! எல்லா ஆண்கள் போல் இந்த முதல் இரவில் நீங்கள் என்னைத் தொட்டுத் ...தழுவி ...உறவு கொண்டிருந்தால் நீங்கள் சராசரி மனிதனாகப் போயிருப்பீர்கள், உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.

''
சிற்றின்ப ஆசையை வேறு அறுத்து, ஆண்டவனின் பேரின்ப வீடு நோக்கி பெரும் பயணம் போகும் உங்களுக்கு நான் தடையாக நிற்கமாட்டேன். என்னை ஆட்கொண்ட தெய்வம் நீங்கள். இனி உங்கள் வழியே என்வழி! என்னை வாழ்த்தி வரம் அருளுங்கள்! என்று இராமலிங்கம் காலில் விழுந்து வழிபடுகிறாள் தனக்கோடி அம்மையார்!

இராமலிங்கம் கண்களுக்கு தனக்கோடி வடியுடை நாயகியாக, சரஸ்வதியாக, பார்வதியாக, மகாலஷ்மியாக, அருள் தெய்வமாக காட்சித் தருகிறார். ''தாயே'' என்று கண்ணீரோடு கரம் குவிக்கிறார் .

தன்னை இராமலிங்கம் வணங்குவதை விரும்பாத தனக்கோடி ....

"'
சுவாமீ !'' என்று இராமலிங்கம் கூம்பிய கரங்களைத் தொடுகிறார் !

உடனே..... அவர் ஸ்பரிசம் பட்டவுடனே அருள் வந்தவள் போல் ஆகிறாள். இருவருடைய கண்களிலும் ஒளி பிரகாசம் தோன்றுகிறது .

இராமலிங்கத்தின் உடலில் ஏறப்பட்ட ஒளி தனக்கோடியின் கைவழியாக அவள் மேனியிலும் பரவுகிறது..இருவரும் ஒன்றும் புரியாமல் திகைத்து போயினர் .இதுவே முதல் இரவில் நடந்த செயலாகும்.

தனக்கோடி அம்மையார், இராமலிங்கத்தின் அருள் பயணத்திற்கு எந்த தடையும் வராமல், மன மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கிறார் .தனக்கோடி இராமலிங்கத்தின் கரம் பட்டவுடனே பிறவிப் பயனை அடைந்து விடுகிறார்.

ஒரு பெண்ணைத் தொட்டுள்ளேன் கலப்புக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.

அங்கே அவரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் ஊரில், தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப் பட்ட ராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார்.

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண் கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக் கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பி வைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப் படுத்தி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார்.

அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும் போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!

வள்ளலாரின் கொள்கைகள்:

மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை:

01.
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

02.
கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.

03.
சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.

04.
புலால் உணவு உண்ணக்கூடாது.

05.
சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.

06.
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

07.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

08.
பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்பும் மாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

09.
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

10.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

வள்ளலார் மானிடருக்கு கூறும் அறிவுரைகள்

01.
நல்லோர் மனதை நடுங்க வைப்பது.

02.
ஏழைகள் வயிறை எரியச் செய்வது.

03.
வலிய தலையிட்டு மானம் கெடுப்பது.

04.
தானம் கொடுப்போரைத் தடுப்பது.

05.
மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைப்பது.

06.
பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது.

07.
குருவை வணங்கக் கூசி நடப்பது.

08.
கோள் சொல்லி குடும்பம் கலைப்பது.

09.
தந்தை தாய் பேச்சைத் தட்டி நடப்பது.

10.
தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசுவது.

மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற் கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியவர் வள்ளலார்.

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு:

எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் வேண்டாம்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்.

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

வேதம் ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அதில் உண்மையை சொல்ல வில்லை.

பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த ராமலிங்க அடிகள், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.

சமரச வேத தருமச்சாலை: கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867--ஆம் ஆண்டு, மே மாதம் 23-வைகாசி மாதம் பதினொன்றாம் தேதி ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை எனப் பெயர் மாற்றம் செய்தார்.

இந்தத் தருமச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி, மத, மொழி, இன, நிறம் நாடு,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்கிறது.

வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரைச் சுற்றிக் கூட்டம் பெருகியது. தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிலிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்களாக உபயோகப் படாமல் இருந்துவந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். தாம் தங்கிய அந்த இடத்துக்கு சித்தி வளாகத் திருமாளிகை என்றுபெயர் சூட்டினார்.

அங்கேஅவர் அடிக்கடி பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் தேகத்தை அக்னிதேகமாக்கி வந்தார்.

இறைவனை ஒளி வடிவாகப் போற்றிய வள்ளலார், சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஓர் ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் வருடம் அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபைஎன்று பெயர் சூட்டினார்.

அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல், அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

25.1.1872,
தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று வள்ளலார் இங்கு ஜோதி தரிசனத்தை துவக்கினார். அன்றிலிருந்து தற்போது வரையில் இவ்விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும். மாத பூசம் நட்சத்திர நாட்களில் இரவு 8 மணிக்கு, ஆறுதிரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.

142
வருடங்களாகஅணையாத அடுப்பு: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.

இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக, இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்புஅணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார். அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 142 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது. உணவுதயாரிக்க அரிசி, உப்பு பக்தர்கள் மூலமாகவந்துவிடுகிறது. தினமும் காலை 6 மற்றும் 8 மணி, பகல் 12, மாலை 5 மற்றும் இரவு 8 மணி என ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்நடக்கும்.

திருக்காப்பிட்ட அறை: வள்ளலார் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில், 1873 அக்டோபரில் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். சில நாட்களுக்குப்பின் சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து, அந்த ஜோதியை இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார். 1874, தை 19ல், சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்றவர், அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். இந்த அறை, "திருக்காப்பிட்ட அறை' எனப்படுகிறது. தைப்பூசம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்படும். அன்று சத்திய ஞானசபையில் இருந்து, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை ஒரு பல்லக்கில் எடுத்துக்கொண்டு, திருக்காப்பிட்ட அறைக்கு கொண்டு செல்வர். மதியம் 12 மணிக்கு அறை திறக்கப்படும். மாலை 6 மணி வரையில் பக்தர்கள் ஜன்னல் வழியாக, வள்ளலார் சித்தியடைந்த அறையைத் தரிசிக்கலாம்.

வள்ளலாரின் கையெழுத்து: சத்திய தருமச்சாலையிலுள்ள வள்ளலார் சன்னதியில், அவரது விக்ரகம் இருக்கிறது. கடுக்காய் மையில் அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகம், அவர் ஏற்றிய ஜோதி மற்றும் ஞான சிம்மாசனம் ஆகியவை இங்கு உள்ளன.

வள்ளலார், கருங்குழியில் திருவேங்கடம் என்பவரின் வீட்டில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். இங்குதான் திருஅருட்பாவின் முதல் நான்கு திருமுறைகளை வெளியிட்டார். வள்ளலார், வெளிச்சத்திற்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு, இரவு நெடுநேரம் எழுதுவார். ஒருசமயம் திருவேங்கடத்தின் மனைவி, நீர் ஊற்றிய எண்ணெய் கலயத்தை வள்ளலார் அருகில் வைத்துச் சென்று விட்டார். வள்ளலார் அத்தண்ணீரை விளக்கில் ஊற்ற அது அணையாமல் எரிந்தது.

நித்ய அன்னதானம்: கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பம் செல்லும் வழியில் தீஞ்சுவை நீரோடை இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் இல்லாதிருக்க வள்ளலார் உருவாக்கிய ஓடை இது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்கிறார்கள். இதற்கு அருகில், "வள்ளலார் தீஞ்சுவை நீரோடை தருமச்சாலை' இருக்கிறது. இங்கு எந்த நேரத்திலும், எவ்வளவு நபர்கள் வந்தாலும் தொடர்ச்சியாக அன்னம்பரிமாறப்படுகிறது.

பசியாறும் பறவைகள்: மருதூரில் ராமலிங்க அடிகளார் பிறந்த வீட்டில், அவரது வாழ்வில் நிகழ

No comments:

Post a Comment